சாதனைகள் மட்டுமே சந்தோஷம் இல்லை…
இரு கண்களையும்
காது மடல்களையும்
திறந்து வைத்தால்
புன்முறுவல் தரும் சின்ன சின்ன தருணங்களாக
நம்மை சுற்றி இன்பம் சிதறி கிடக்கிறது..

டிராபிக் சிஃனலில் count down ஐ வெறித்து பார்க்காமல்
பக்கத்து காரில்
டாடா காட்டும் குழந்தையை பாருங்கள்..
புன்னகையோடு பயணியுங்கள்..

கொடுப்பவரை ஏழை ஆக்காது..
ஆனால்
பெறுபவரை செல்வந்தர் ஆக்கும்..
எவ்வளவு செலவு செய்தாலும்
குறையாத செல்வம்
புன்னகை..
அதனால்
அனபையும் புன்னகையையும் உதிருங்கள்
உலகை சிறை பிடிக்கலாம்…..

இருபது வருடங்கள் கழித்து நீ பெரிய ஆளாய் இருப்பது முக்கியம் என்றால்
அதை விட முக்கியம்
அந்த இருபது வருடங்களை நீ எப்படி வாழந்தாய் என்பதே…

Leave a comment

Quote of the week

“To be beautiful means to be yourself. You don’t need to be accepted by others. You need to accept yourself..”

~ Thich Nhat Hanh