நான் முதலில் பாட புத்தகங்களைத் தவிர்த்து படித்த புத்தகம் “தண்ணீர் தேசம்”..
ஒன்பதாம் வகுப்பு..
பள்ளி பேருந்தில் படித்த தினங்கள்..
நினைத்தாலே மனதில் துள்ளும்
பல மலரும் நினைவுகள்…
காதல் செய்வது சுலபம்..
ஒருவரை காதலிக்க வைப்பது கடினம்..
பெண்களால்.. அவர்கள் கண்களால்.. அதுவும் சுலபம்..
பகுத்தறிவோடு காதலிக்க வைப்பது தான் மிகவும் கடினம்..
கவிஞர்களால் மட்டுமே அதை செய்ய முடியும்..
நமக்கு தமிழ் மேல் காதல் மலர..
கவிஞரின் முயற்சியே.. தண்ணீர் தேசம்..
பள்ளி பருவத்தில்
இளம் வயதில்
கவிதை நடையும்
மனதை உருக்கும் காதல் கதையும்
அதனுடன் கலந்த
அறிவியலும்
அரசியலும்
என
இந்த புத்தகம் என் மனதில் உருவாக்கிய அலைகள்..
அந்த அலைகள் என் வாழ்வில் செய்த தாக்கங்கள்
சொல்ல வார்த்தையில்லை..
இந்த காவியத்தை சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைதித்தது..
“வலைகளின் எண்ணிக்கை அதிகமானதற்காய்
மீன்களின் எண்ணிக்கை குறைந்து விடவில்லை..”
“ஒப்புக்கொள்கிறேன். ஆனால்,
வலைகளை அறுக்கத் தெரிந்தவைமட்டுமே
வாழ்கின்றன என்கிறேன்..”
“எரிந்து விட்டது வீடு
இனி
தெளிவாய் தெரியும் நிலா..”
என விளிம்பு நிலை மக்களின் தன்னம்பிக்கையை எடுத்து சொல்வதிலும்..
“தன்மேல் விழும் மண்ணைச் சோதனை என்று சொன்னதுண்டா விதை?”
என வாழக்கை தத்துவங்களும்
“அரசாங்கம் செய்ய
முடியாததை மழை செய்தது –
பள்ளத்தில் மூழ்கிய பாமர
மக்கள் பள்ளியில்
ஒதுங்கினார்கள்.”
என அரசியலும்..
நீ கடல்; நான் பூமி.
ஒவ்வொரு நாளும் என் ஓரக்கரைகளை
அரித்து அரித்து என்னை உன்
உள்ளிழுத்துக் கொண்டிருக்கிறாய்..
என காதல் உவமை பேசுவதும்..
உண்மையிலேயே இது ஒரு கவித்துவமான கதை..
ஒரு முறை நீங்களும் சென்று வாருங்கள்
தண்ணீர் தேசத்திற்கு..
Leave a comment