என் இனிய மொட்டுகளே..
இன்று ஒரு இனிமையான உரையாடல் நம்மிடையே..
தீபன் கூறினான்..
அப்பா நான் sad ஆக உள்ளேன் என்று..
ஏன் குட்டி என்றேன் அந்த கவலை என்னை தொற்றிக்கொள்ள..
நான் grow ஆகலை அப்பா, நான் வளர்ந்தால் நீங்கள் old ஆகி விடுவீர்கள்
என்றான்..
எனக்கு தூக்கி வாரி போட்டது.. இந்த குட்டி இதயத்தில் இப்படி ஒரு சிந்தனையா என்று..
மனிதன் வளர்வதும் வயதாவதும் இயற்கையின் அமைப்பு என்றேன்..
புரியாமல் அவன் மறுத்து நான் வளரமாட்டேன் என்றது என் இதயத்தில் கனமாக இருந்தது..
அப்பொழுது தீரன் சொன்னான் “டேய் தீபன், நம்ம grow ஆகலேனா அப்புறம் always school போயிட்டே இருக்கனும் டா” என்று..
என் அன்பு செல்வங்களின் பேச்சுக்கு சிரிப்பதா அழுவதா என தெரியாமல் நானும் சிந்தனையில் மூழ்கிவிட்டேன்..
அம்மாக்கும்அப்பாவுக்கும் எவ்ளோ வயதானாலும் நீங்கள் எங்களுக்கு same குட்டி குழந்தைகள் தான்…

Leave a comment