அன்பு மொட்டு பட்டு.. உங்களுக்காக நான் எழுதி பல நாட்கள் ஆகி விட்டன..


உறவுகள் ஒரு தொடர்கதை

அதன் கதவுகள் ஒரு கண்ணாடி

உறவுகளில் விழும் விரிசல்கள் கண்ணாடியில் உள்ள விரிசல் போல நிரந்தரமாகி விடும்..


ஆம்..

பணம் இல்லாமல் வாழ்வது கடினம்

நான் வளர்ந்தபொழுது அதன் வலியை உணர்ந்துள்ளேன்

என்றும் உங்களுக்கு அந்த வலி வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாக உள்ளேன்


ஆனால்..

பணம் போதுமானதாக இருந்தாலும் வலி இருக்கும்..


ஆம்..

– பணம், சொத்து எல்லாம் இருந்தாலும் அது பத்தாது என்று நீங்கள் நினைத்தால்..

– அருகில் இருப்பவர்களை விட நாம் நிறைய வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தால்..

– கெட்ட பழக்கங்கள் பழகிக்கொண்டால் ..

வலியே மிஞ்சும்..


எனவே..

நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொள்ளுங்கள்..

அனைவருக்கும் உதவுங்கள்..

சிக்கனமாய் இருங்கள்..

உறவுகளுக்கான மரியாதையை என்றும் மறவாதீர்கள்..

வாழ்க்கையை ரசித்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்..

Love your Life..

சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வாழ்க்கையில் புகழ், மகிழ்ச்சி, செல்வம் எல்லாம் பெருக இருக்க வேண்டும், அதை விட்டு பணச்செல்வம் சேர்ப்பதில் மட்டும் குறி வைத்து, போதும் என்ற மனதை விட்டு விடாதீர்கள்.. வலியே மிஞ்சும்..

Happiness consists not in having much but being content with what you have

Happiness will never come to those who fail to appreciate what they already have

Pic Courtesy: Dheepan & Dheeran 😛

Leave a comment

Quote of the week

“To be beautiful means to be yourself. You don’t need to be accepted by others. You need to accept yourself..”

~ Thich Nhat Hanh