தந்தையர் தினம்..
என் மனதில் ஏனோ ஒரு மெல்லிய சோகம்..
எனக்கு கடவுள் குடுத்த வரம் ஒரு Imperfect அப்பா..
ஆம்..
அவர் Imperfect என்பது எங்களுக்கு கிடைத்த ஒரு வரமே..
வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்று கற்று கொடுத்த தந்தைகள் உண்டு.. அதோடு சேர்த்து ..
இப்படி வாழவும் கூடாது என்றும் கற்று கொடுத்தவர் எங்கள் அப்பா..
வரம்..
பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என உணர்த்தியவர்..
அண்ணன் தம்பி உறவை உணவாக ஊட்டி வளர்த்தவர்..
நடப்பையும் உறவாக பாராட்டியவர்..
அன்பை அளவில்லாமல் அளித்தவர்.. களவும் கற்று மற என கற்பித்தவர்
கல்வியின் அருமையை ஆழமாக உணர்த்தியவர்..
“என் அரண்மனையில் என் அன்னையே ராணி.. என் மகன்களில் வாழ்வில் அவர்கள் அன்னை ராணியாக இருப்பாள்” என வாழ்ந்து காட்டியவர்..
நான் கூறுகிறேன் மொட்டு பட்டு..உங்கள் வாழ்வில் உங்கள் அன்னையே ராணி..நீங்கள் இளரவரசர்கள்..
உங்கள் மனைவி இளவரசி.. அவளும் ஒரு நாள் ராணி ஆவாள்.. இதுவே வாழ்க்கை சக்கரம்..
வரம் தான்..
வெளியே இருந்து பார்த்தவர்களுக்கு அவர் ஒரு குடிகாரர்..
அதனால் எங்கள் வீட்டில் கஷ்டங்கள் வராமல் இல்லை..
ஆனால்..
பாச மலர்.. அடிக்கும் கைகளால் இறுக்க அனைத்தவர்..
எங்கள் வாழ்வில் அன்பும் அறமும் உடைத்தாயின்
அதன் ஆணி வேர் அவர்..
மொட்டு பட்டு..
நீங்கள் அந்த imperfect தாத்தா வை பார்க்க குடுத்து வைக்கவில்லை
Fun தாத்தா cool தாத்தா வாக உங்கள் வாழ்க்கையை நிரப்பி இருப்பார்..
ஆம்..
எங்கள் தந்தை எங்களுக்கு கற்று கொடுத்த வாழ்க்கையை
பாதியேனும் உங்களுக்கு கற்றுக்கொடுத்தால்
அது
எனக்கு
அவர் கொடுத்த
வரம்..
இன்று பலர் எனக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள் கூறுகின்றனர்..
அணைத்து தந்தைகளுமே வரம் தான்..
Remembering my அப்பா…

Leave a comment