மொட்டு பட்டு!
இறைவனின் அருளால் எங்கள் வாழ்வில்
வசந்தமாய் வந்த
இரு மழலை மொட்டுக்கள்..
எங்கள் வருங்கால நினைவு விழுதுகள் வளர
ஆணி வேறாய் மாறிய
ஆசை சிட்டுக்கள்..
ரெட்டை மொட்டுக்கள் வளர்வதை
மருத்துவர் கூறும் முன்பே
அன்னையின் காதில்
ரகசியமாய் கூறிய
மெல்லிசை மெட்டுக்கள்..
நாள் மலைத்து தான் போனேன்..
பரிசோதனைக்கு செல்லும் முன்பு
“மாம்ஸ், Twins ஆ இருந்த எப்படி இருக்கும்” என்று அவள் கூற
பரிசோதனைக்குப் பின் மருத்துவர்
“உங்களுக்கு twins” என்று சொன்னதும்
மலைத்து தான் போனேன்!
எவ்வளவு ரகசியமாக பேசிகொண்டுள்ளார்கள்
தாயும் சேய்களும் என்று…
இரு வீட்டாரும் இனிய செய்தியில் மகிழ
அண்ணனும் அண்ணியும் புகைப்படமாக கேட்ட
அந்த இனிய தருணத்தின்
அடையாளம் கீழே…

Leave a comment